My Blogger TricksAll Blogger TricksTechtunes
Preview
ஏகத்துவ வளர்ச்சிப் பணிக்கு உங்களுடைய சந்தாக்களையும் நன்கொடைகளையும் வாரி வழங்கிடுவீர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வங்கிக் கணக்கு: TAMILNADU THOWHEED JAMATH, INDIAN BANK, A/C NO: 788274827, MANNADY BRANCH: துபையில் : 055-4481405, 055-3873002 , 050-8486296
Showing posts with label மாநில தலைமை. Show all posts
Showing posts with label மாநில தலைமை. Show all posts

ஆம் ஆத்மி கட்சி குறித்து TNTJ வின் நிலை என்ன ?

காங்கிரஸை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்ற நினைத்த பா.ஜ.க, ஊழலைக் காரணம் காட்டி காங்கிரஸை எதிர்க்க முடியாது என்பதை நன்றாக அறிந்து
வைத்திருக்கிறது. ஏனெனில் ஊழலில் காங்கிரஸும் பாஜகவும் சமநிலையில் உள்ளன.
அன்னா ஹசாரே என்ற முகமூடியைப் பயன்படுத்த திட்டமிட்டு வாழும்கலை என்ற பெயரில் ச்ங்பரிவாரத்துக்கு ஆள் பிடிக்கும் ரவிசங்கர் என்பவர் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி உண்ணா விரதம் இருக்க வைத்தனர். இதற்கு முன் அன்னா ஹசாரேயை யாருக்கும் தெரியாது.
இதற்காக பெருமளவில் செய்யப்பட்ட விளமபரங்களுக்கும் உண்ணாவிரதத்துக்குவரும் மக்களுக்கு தேவையான வசதிகள் செய்து தருவதற்கும் நான் தான் உதவி செய்தேன் என்று ரவி சங்கரே வாக்கு மூலம் கொடுத்ததாகவும் செய்திகள் வெளிவந்தன பாஜகவினர் தங்களுக்கு ஆதரவான மீடியாக்கள் மூலம் அன்னா ஹசாரேவை தூய்மையின் மறுவடிவம் என்று சித்தரித்தனர்.
தனக்குப் புகழ் கிடைக்கிறது என்பதற்காக காங்கிரஸை மட்டும் ஊழலின் ஒரே அடையளம் என்ற தோற்றத்தை அன்னா ஹசாரே ஏற்படுத்தினார்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் போது காங்கிரஸை ஒழிக்க பாஜவை ஆதரிக்குமாறு அன்னா ஹசாராவை அறிக்கை விடச் செய்தும் பிரச்சாரத்தில் இறக்கியும் ஆதாயம் அடையலாம் என்பது பாஜகவின் கணக்கு.
சங்பரிவாரத்தின் மறைமுக ஆதரவுடன் தான் இப்போராட்டம் நடக்கிறது என்பதை அறியாமல் ஊழலை ஒழிப்பதில் உண்மையான அக்கரையுள்ள இன்னும் சிலரும் அன்னாஹசாரேயுடன் சேர்ந்து கொண்டனர். சங்பரிவாரத்தை எதிர்ப்பதில் உறுதியான பிரசாந்த் பூசன் உள்ளிட்டவர்களும் ஹசாரேக்குப் பின்னால் திர்டண்டனர்.
ஹசாரேயுடன் இணைந்து ஊழல் ஒழிப்பில் இறங்கிய கெஜ்ரிவால், பிரசாந்த் பூசன் போன்றவர்கள் ஹசாரே காங்கிரசின் ஊழலை மட்டும் எதிர்ப்பதையும், கர்நாடக்
சுரங்க ஊழல், லோக்பால் அமைக்க மறுக்கும் மோடியின் ஊழல் ஆகியவற்றைக் கண்டு கொள்ளாமல் ஹசாரே இருப்பதையும் அவர்கள் விளங்கிக் கொண்டனர்.
தங்களுக்கு ஆதரவாகத் திரளும் மக்கள் காங்கிரஸின் ஊழலை மட்டுமின்றி பாஜகவின் ஊழலையும் எதிர்ப்பவர்கள் இரண்டும் அல்லாத இன்னொரு மாற்று சக்தியைத்தான் எதிர்பார்க்கிறார்கள் என்று அவர்கள் துல்லியமாகக் கணக்கிட்டனர்.
அன்னா ஹசாரே பாஜகவின் கைக்கூலி என்பதையும் அவர்கள் விளங்கிக் கொண்டு நாமே தனிக் கட்சி ஆரம்பித்தால் என்ன என்று சிந்தித்து களமிறங்கினார்கள்.
காங்கிரஸ் எதிர்ப்பு அலையைப் பயன்படுத்தி வெற்றி பெற நினைத்தவர்களின் வாயில் கெஜ்ரிவால் மண்ணை அள்ளிப்போட்டார். ஹசாரேவுக்குப் பின்னால் திரட்டப்பட்ட மக்களில் 90 சதவீதம் பேரைத் தன்னுடன் இழுத்துச் சென்று ஆம் ஆத்மி (பொதுஜனம்) என்ற பெயரில் கட்சியை ஆரம்பித்தார். டெல்லி தேர்தலில் மிகப்பெரும் வெற்றி பெற்றதன் மூலம் சரியான மாற்று அணி இருந்தால் காங்கிரஸ் எதிர்ப்பு ஓட்டுக்கள் பீஜேபிக்குப் போகாது என்பதை நிரூபித்துக் காட்டினார்.
தான் விரித்த வலையில் தானே விழுந்த கதைக்கு பாஜவின் இந்தக் கேடுகெட்ட செயலைத் தவிர வேறு சிறந்த உதாரணம் இருக்க முடியாது.
ஆம் ஆத்மி ஆரம்பித்து அதற்கு மக்கள் ஆதரவு பெருகி வருவதைக் கண்டுகொண்ட பின்தான் ஹசாரேயின் ஆதரவு இனி ஒன்றுக்கும் உதவாது என்பதை உணர்ந்து மோடியை வைத்து பெறப் பார்ப்போம் என்று தனது பாதையை மாற்றிக்கொண்டது பாஜக. அன்னா ஹசாரேக்கு சிலர் சிலை வைக்க முயன்ற போது அதற்கு எதிர்ப்பு எழுந்தது. உடனே தனது சிலையை வைக்க ஆதரவு கேட்டு ஹசாரே பாஜகவுக்கு கடிதம் எழுதினார். தனது சிலையை வைக்க தானே ஆசைப்படும் புகழ் விரும்பி என்பதும் பாஜகவின் கைக்கூலி என்பதும் இதன் மூலம் இன்னும் நிரூபணமானது. இந்தக் கடிதம் இவர்களின் கூட்டுச் சதியை இன்னும் தெளிவாக நாட்டு மக்களுக்கு உணர்த்தி விட்டது.
சங்பரிவாரத்தால் ஊதிப்பெரிதாக்கப்பட்ட ஹசாரே கெஜ்ரிவாலை ஊதிப்பெரிதாக்கினார். ஆனால் ஹசாரேயை பாஜக ஊதியதை விட ஹஸாரே கெஜ்ரிவாலை அதிகம் ஊதிப் பெரிதாக்கிவிட்டார். நான் ஆம் ஆத்மியை ஆதரிக்கவில்லை என்று தேர்தல் நேரத்தில் ஹசாரே பேட்டி கொடுத்தும் அது மக்களிடம் எடுபடாமல் போய்விட்டது. மக்கள் ஊழலை ஒழிக்க காங்கிரஸ் பாஜக அல்லாத இன்னொரு சகிதியைத் தான் எதிர்பார்த்த்தார்களே தவிர காங்கிரசுக்கு எதிர்ப்பை ஏற்படுத்தி அதன் ஆதாயத்தை பீஜேபி அடைவதை மக்கள் விரும்பவில்லை.
நரேந்திர மோடிக்கு பில்டப் கொடுத்த ஊடகங்கள் மோடியில் பெண் தொடர்பு காரணமாக அவரை அருவறுப்பாக பார்த்தனர். எப்படி பல்டி அடிப்பது என்று தெரியாமல் விழித்தனர். ஆம் ஆத்மியில் டெல்லி வெற்றிக்கும் பிறகு மோடியைக் கீழே போட்டு விட்டு ஆம் ஆத்மி புகழ் பாட ஆரம்பித்து விட்டனர்.
டெல்லி தேர்தலுக்குப் பின் காங்கிரஸும் வேண்டாம்; பாஜகவும் வேண்டாம் என்று விரும்பக் கூடிய மக்கள் ஆம் ஆத்மியின் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளனர். இதை உணர்ந்து கொண்ட ஆம் ஆத்மியும் 300 இடங்களில் வேட்பாளர்களை நியமிக்கப்போவதாக அறிவித்துள்ளது.
மோடியின் பிரதமர் கனவு கெஜ்ரிவால் மூலம் களைந்து விட்டதாகவே நமக்குத் தெரிகிறது.
Continue Reading...

அன்புள்ள கொள்கைச் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.

துஆ மட்டும் போதும் 

அன்புள்ள கொள்கைச் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். 

எனக்கு கேன்ஸர் நோய் தாக்கியுள்ளது என்பதை நான் கொள்கைச் சகோதரர்களுக்கு தெரிவித்ததை மறந்திருக்க மாட்டீர்கள். 

அறுவை சிகிச்சை செய்வது மட்டுமே ஒரே வழி என்றும் கேன்சர் பாதித்த பகுதிகளில் மட்டுமின்றி அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் வெட்டி எடுப்பது மட்டுமே ஒரே வழி என்றும் ஆங்கில மருத்துவர்கள் ஒருமனதாகக் கூறினார்கள்.

 என் மீது அன்பு வைத்திருந்த கொள்கைச் சகோதாரர்கள் மட்டுமின்றி கொள்கையில் உடன்பாடு இல்லாமல் தனிப்பட்ட முறையில் என்மீது மதிப்பு வைத்திருந்த சகோதரர்களும் ஆங்கில மருத்துவம் தான் சரியானது எனவும் வலியுறுத்தினார்கள். அமெரிக்கா போகலாம். லண்டன் போகலாம். சிங்கப்பூர் போகலாம் எல்லா செலவுகளையும் நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று பல சகோதரர்கள் முன்வந்தனர். ஏழை எளிய மக்கள் கூட எனது நிலத்தை விற்றுத் தருகிறேன்; நகையை அனுப்புகிறேன் என்றெல்லாம் எனக்கு உறுதுணையாக நின்றார்கள். 

என் உறவினர்களில் எவ்வளவு செய்வதற்கு தகுதிபடைத்தவர்கள் உள்ளனர். மனமகிழ்வோடு செலவு செய்ய அவர்கள் தாயாராக இருந்தனர். 

அவர்களின் அன்பு என்னை நெகிழ வைத்தது என்றாலும் அந்த உதவிகளை நான் கன்னியமான முறையில் மறுத்து விட்டேன். எனது மருத்துவ வகைக்காக பணமாகவோ பொருளாகவோ எந்த உதவியும் யாரிடமும் நான் பெறவில்லை. அதை நான் விரும்பவில்லை. 

அறுவை சிகிச்சை செய்வதற்கு நான் உடன்படாததற்கு இரணடு காரணங்கள் இருந்தன. எனது குடும்பத்தில் சிலருக்கு கேன்சர் ஏற்பட்டு அறுவை சிகிச்சைக்குப் பின் அதிகமாகப் பரவி அவர்கள் மரணித்ததைக் கண்டதால் ஏற்பட்ட மனக்குழப்பம் ஒரு காரணம்.

 அறுவை சிகிச்சை என்றால் அதைப் பலரும் அறியும் நிலை ஏற்பட்டு எனக்கு உதவ முன்வருவார்கள்., என்னைக் கேட்காமலே எனக்கு உதவுவார்கள். அடிக்கடி நோய் விசாரிப்பார்கள். மருத்துவமனையில் அத்கிமானோர் குழுமி நோயையும் ஒரு பந்தாவாகக் காட்டும் நிலை ஏற்படும் என்பது எனக்குப் பிடிக்கவில்லை என்பதும் கூடுதல் காரணம்.

 எனவே அறுவை சிகிச்சை இல்லாமல் மாற்று மருத்துவம் செய்து பார்ப்போம் என்று மாற்று மருத்துவ முறைகளைப் பல மாதங்கள் கடைப்பிடித்து வந்தேன். 

ஆனால் அதனால் எந்தப் பயனும் ஏற்படவில்லை என்பதுடன் கேன்சர்கட்டியின் அளவு தாறுமாறாக அதிகரித்தும் வந்தது. 
விசாரிப்பவர்களிடம் நன்றாக உள்ளது என்று சொல்லி அவர்கள் எனக்காக கவலைப்படுவதைத் தவிர்த்து வ்ந்தேன். ஆனால் அதன் பாதிப்புகள் அதிகரித்து வருவதை உண்ர்ந்த போது எனக்கு ஏற்பட்டுள்ள வகை கேன்சருக்கு மாற்று மருத்துவம் இல்லை என்று எனக்கு தாமதமாகத் தோன்றியது. எனவே அறுவை சிகிச்சை செய்து விடுவோம் என்ற முடிவுக்கு வந்தேன். 

ஆனால் இதை ஒருவருக்கும் சொல்லாமல் செய்தால் தான் மேலே சொன்ன விளைவுகளைத் தவிர்க்க முடியும் என்று கருதி என் மனைவி என் கடைசி மைத்துனன் தவிர யாருக்கும் சொல்லாமல் பிரபலமில்லாத ஒரு மருத்துவமனையில பிரபலமான டாக்டர் மூலம் அறுவை சிகிச்சை செய்வதற்காக அட்மிட் ஆனேன். 

ராஜபாளயம் நிகழ்ச்சியை நேற்று முடித்து விட்டு புறப்பட்டு இன்று மருத்துவமனையில் அட்மிட் ஆகி ஆப்ரேஷன் செய்து கொண்டேன். காலை 11.30 மணி முதல் பகல் 3.30 மணி வரை நான்கு மணி நேரம் ஆபரேஷன் நல்லபடியாக நடந்தது. அல்ஹ்மது லில்லாஹ். 

மாநில நிர்வாகிகளுக்கோ, உறவினர்களுக்கோ, வேறு நண்பர்களுக்கோ இதை நான் தெரிவிக்கவில்லை. என்னைப் பார்க்க வருவதற்காக அவர்கள் செலவு செய்து வருவதால் அவர்களுக்கு ஏற்படும் சிரமங்களை நான் அறிவேன் மேலும் மருத்துவ மனையில் கூட்டமாக குழுமி அது ஒரு செய்தியாகவும் பரபரப்பாகவும் ஆகிவிடக் கூடாது என்பதாலும். ஒருவருக்கும் சொல்லவில்லை ஆபரேஷன் முடிந்து சில மணி நேரங்களுக்குப் பின்னர் தான் மாநில நிர்வாகிகளுக்கும் உறவினர்களுக்கும் நல்லபடியாக சிகிச்சை முடிந்ததைத் தெரிவித்தேன். 

துன்பம் நேரும் போது மற்றவர்களின் ஆறுதலை அனைவரும் விரும்புவார்கள். ஆனால் இயல்பாகவே எனக்கு துன்பங்கள் நேரும் போது யாரும் அனுதாபம் காட்டினால் அது குறித்து அக்கறை காட்டினால் அது எனக்கு ஆறுதலைத் தருவதற்கு பதிலாக சங்கடத்தையே ஏற்படுத்துகிறது. குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் பயங்கரமான பாதிப்பு ஏற்பட்டு விட்டதோ என்ற எண்ணத்தை அது ஏற்படுத்தி விடும். இதன் காரணமாகவே நான் இது போன்ற விசாரணைகளை விரும்புவதில்லை. 

எது நடந்தாலும் நானே இலேசாக எடுத்துக் கொள்ளும் போது ஆளாளுக்கு ஏன் பயம் காட்டுகிறார்கள் என்ற எண்ணம் தான் எனக்கு ஏற்படுகிறது. எனவே தான் நான் ஒருவருக்கும் சொல்லாமல் என் சொந்தச் செலவில் யாருடைய உதவியையும் தயவையும் நாடாமல் நானே அல்லாஹ்வின் அருளால் என் பிரச்சனைக்கு என்னால் இயன்ற தீர்வைக் கண்டுள்ளேன். 

ஆப்ரேஷன் முடிந்து நான் மன உறுதியுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்கிறேன். இதனால் தான்  நானே உட்கார்ந்து இதை கம்போஸ் செய்து நானே இணைய தளத்தில் ஏற்ற முடிந்தது. 

இதை நான் அனைவருக்கும் தெரிவிக்கக் காரணம் மாநில நிர்வாகிகளிடமும் என் குடும்பத்தாரிடமும் ஏன் ஒருவருக்கும் சொல்லவில்லை என்று யாரும் கேட்டு அவர்களைத் தவறாக நினைத்து விடக் கூடாது என்பது தான். அவர்களுக்கே நான் சொல்லாத போது அவர்கள் மற்றவர்களுக்கு எப்படி தெரிவிப்பார்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பது தான். 

ஆங்கில மருத்துவர்கள் இதன் மூலம் பூரண குணமடைய 90 சதவிகிதம் வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர். அவர்கள் மனிதர்கள் தான். 

அவர்கள் கூறுவது போல் குணமடைய உங்கள் அனைவரின் துஆ மட்டும் போதும். நான் வேண்டுவது உங்கள் துஆவை மட்டும் தான் 

அன்புடன்

 பீ.ஜைனுல் ஆபிதீன்

Article Copied From: www.onlinepj.com , Read more at: http://onlinepj.com/vimarsanangal/pj_patriya_vimarsanam/dua_mattum_pothum/
Copyright © www.onlinepj.com

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிகழ்ச்சிகள் இமயம் டிவியில்

mega 24 logoதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிகழ்ச்சிகள் இமயம் டிவியில் ஒளிபரப்பட்டு வந்தன. தவிர்க்க இயலாத காரணங்களால் அந்நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து பிறமத சகோதரர்கள் மற்றும் பிற மாற்றுக் கொள்கையுடைய சகோதரர்கள் உள்ளிட்ட பலதரப்பு மக்களிடமிருந்தும் நிகழ்ச்சியை வேறு சேனலில் ஒளிபரப்பச் சொல்லி கோரிக்கைகள் வந்தன.
அந்தக் கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு, வரக்கூடிய மே 15ஆம் தேதி முதல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிகழ்ச்சிகள் மெகா 24 தொலைக்காட்சியில் தினந்தோறும் இந்திய நேரப்படி இரவு 10மணி முதல் 11மணி வரை ஒளிபரப்பாக உள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இந்த செய்தியை மாவட்ட கிளை நிர்வாகிகள் துண்டுபிரசுரங்கள், பொதுக்கூட்ட அறிவிப்புகள், ஜுமுஆ அறிவிப்புகள், பேனர்கள், போஸ்டர்கள் ஆகியவற்றின் மூலம் பட்டி தொட்டி எங்கும் கொண்டு செல்லும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
இப்படிக்கு,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநிலத் தலைமயகம்
Continue Reading...

ஹைதராபாத் குண்டு வெடிப்புக்கு பின்னணியில் யார்? TNTJ

 ஹைதராபாத் குண்டு வெடிப்புக்கு பின்னணியில் யார்? TNTJ vS RSSRSS , கேப்டன் டிவி , விவாதம் , வீடியோ , ஹைதராபாத் குண்டு வெடிப்பு

கேப்டன் நியூஸ் தொலைகாட்சியில் ZERO HOUR (விவாத மேடை) நிகழ்ச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் (TNTJ) Vs இந்து முன்னணி (RSS) நேருக்கு நேர் விவாதம்.

Thanks
புதுமடம்TNTJ

Continue Reading...

ஆசிட் வீசப்பட்ட அபலை பெண் வினோதினி - தீர்வு என்ன(வீடியோ

ஆசிட் வீசப்பட்ட அபலை பெண் வினோதினி - தீர்வு என்ன(வீடியோ

உரை : திருவள்ளூர் யூசுப்

Thanks
Adiraitntj

Continue Reading...

அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை சரியா?

அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை சரியா?

சென்னை: தமிழ்நாடு தவ்ஹீத் சார்பாக நேற்று (17.02.2013) நடைபெற்ற ”அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை சரியா?”  என்ற தலைப்பில் மாநில தலைவர் சகோ.பிஜே அவர்கள் ஆற்றிய உரை. அனைவரும் அவசியம் கேட்க வேண்டிய உரை.

Continue Reading...

புதிய தலைமுறை அக்னிப் பரீட்சை: பிஜே பேட்டி!

புதிய தலைமுறை அக்னிப் பரீட்சை: பிஜே பேட்டி!

சென்னை: நேற்று (02.02.2013) புதிய தலைமுறை தொலைகாட்சி அக்னிப் பரீட்சை நிகழ்ச்சியில் இன்றைய பரப்பான சூழல் குறித்து அளித்துள்ள பேட்டி!

Continue Reading...

சகோ. பீஜே கலந்துக்கொள்ளும் அக்னிப்பரீட்சை நிகழ்ச்சி முன்னோட்டம்

சகோ. பீஜே கலந்துக்கொள்ளும் அக்னிப்பரீட்சை நிகழ்ச்சி முன்னோட்டம்

இன்ஷா அல்லாஹ் , நாளை(02.02.2013) இரவு இந்திய நேரம் 8 மணிக்கு புதிய தலைமுறை டிவியில், "அக்னி பரீட்சை" நிகழ்ச்சியில் TNTJ மாநில தலைவர் P.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் கலந்து கொண்டு பதிலளிக்கும் அக்னிப்பரீட்சை நிகழ்ச்சி காணத் தவறாதீர்கள்....

இந்நிகழ்ச்சி இந்திய நேரம் இரவு 11 மணிக்கு மறுஒளிபரப்பு செய்யப்படும்.

அமீரக (UAE) நேரம் - மாலை 6.30 மணி
சவுதி நேரம் - மாலை 5.30 மணி.

இந்த நிகழ்ச்சியை http://puthiyathalaimurai.tv/ என்ற இணையதளத்திலும் காணலாம்.
 — in Chennai, Tamil Nadu.

Continue Reading...

திருச்சி விவாதம் நேரடி ஒளிபரப்பு

திருச்சி விவாதம் நேரடி ஒளிபரப்பு
__________________________________
பிப் 2,3,4 ஆகிய திகதிகளில் திருச்சியில் நடைபெறவிருக்கும் விவாதம் www.onlinepj.comஇணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் இன்ஷால்லாஹ்

நேரம் சனி காலை : 10 மணிக்கு ஆரம்பம்

பீஜே vs சைபுத்திதீன் ரஷாதி
Continue Reading...

விஸ்வரூபம் தடை குறித்து தமிழக முதல்வர் பேட்டி! [வீடியோ]

விஸ்வரூபம் தடை குறித்து தமிழக முதல்வர் பேட்டி! [வீடியோ]

விஸ்வரூபத்தை எதிர்க்கும் முஸ்லிம் அமைப்புகள் சிறு குழுக்கள் அல்ல தவ்ஹீத் ஜமாஅத் 7.5 லட்சம் உறுப்பினர்களை கொண்ட மாபெரும் அமைப்பு - தமிழக முதல்வர் ஜெயலலிதா.

யா அல்லாஹ் எங்களுக்கு தலைக்கனத்தை தந்துவிடாதே! மன்னிப்புடன் உன்னிடமே மண்டியிடுகிறோம்!

புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே! 

Continue Reading...

சர்சைக்குரிய காட்சிகளை நீக்கி விட்டு விஸ்வரூபம் படத்தை வெளியிடலாமா? மாநிலத் தலைவர் விளக்கம்!

சர்சைக்குரிய காட்சிகளை நீக்கி விட்டு விஸ்வரூபம் படத்தை வெளியிடலாமா? மாநிலத் தலைவர் விளக்கம்!

சர்சைக்குரிய காட்சிகளை நீக்கி விட்டு விஸ்வரூபம் படத்தை வெளியிடலாமா? – மாநிலத் தலைவர் விளக்கம்!

Continue Reading...

இஸ்லாமிய சட்டமே தீர்வு - மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம்

இஸ்லாமிய சட்டமே தீர்வு - மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம்

நேரடி ஒளிபரப்பு www.onlinepj.com ல் செய்யப்படும்
Continue Reading...

கலைஞருக்கு TNTJ விவாத அழைப்பு!

கலைஞருக்கு TNTJ விவாத அழைப்பு!

ரிசானா விவகாரம் : கலைஞர் வைத்த வாதம் சரியா?

இலங்கை பெண்மணி ரிசானாவிற்கு சவூதி அரசு மரணதண்டனை அளித்த விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு இஸ்லாத்தை விமர்சிக்க இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி இஸ்லாமிய விரோதிகள் இஸ்லாத்தின் மீது புழுதி வாரி வீசும் இந்நேரத்தில் தி.மு.க. தலைவர் கலைஞர் இது குறித்து அறிக்கை ஒன்றை கடந்த 21.03.2013 அன்று வெளியிட்டுள்ளார்.

மரணதண்டனைக்கு முடிவு கட்ட உலக நாடுகள் ஒன்று சேர வேண்டும் என்ற தலைப்பில் அவரது அறிக்கை பத்திரிக்கைகளில் வெளியிடப்பட்டுள்ளது.

தன்னை இலக்கியவாதி, முற்போக்குவாதி என்று சொல்லிக் கொள்ளும் மனுஷ்ய புத்திரன் என்பவர் நக்கீரன் இதழில் பொய்யின் மறுவடிவமாகவும், புளுகு மூட்டையின் மொத்த உருவமாகவும் எழுதிய கட்டுரையை மேற்கோள்காட்டி, அதையே தனது வாதத்திற்கு ஆதாரமாகக் காட்டி கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையைக் கண்டு நமக்கு ஆச்சர்யம்தான்.

மனுஷ்ய புத்திரன் என்பவர் தனது கட்டுரையில் எழுதிய செய்திகளை அப்படியே நம்பி அதையே தனது கட்டுரையிலும் எழுதி பொய்(யரு)க்கு உரம் சேர்த்துள்ள கலைஞரிடத்தில் சில கேள்விகள்:

ஒருவர் ஒரு செய்தியை சொல்கின்றார் என்றால் அதுகுறித்த செய்திகளை ஆய்வு செய்யாமலும், அதற்குரிய ஆதாரங்களைக் கேட்காமலும் அதை அப்படியே நம்பிவிடுவீர்களா?
அதற்கு ஆதாரம் எதையும் கேட்க மாட்டீர்களா? அதை ஆய்வு செய்ய மாட்டீர்களா?
உங்களைப் பற்றியும் உங்களது குடும்பத்தார் பற்றியும் ஜெயலலிதா விடக்கூடிய அறிக்கைகள் அனைத்தையும் அப்படியே நம்பி ஏற்று அதை ஆராயாமல், அதற்குரிய சான்றுகளைக் கேட்காமல் அதை உண்மை என்று சொல்லி மற்றவர்கள் உங்களைப் பற்றி ஜெயலலிதா விட்ட அறிக்கையை அப்படியே வெளியிட்டால் அதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?

மேற்கண்ட கேள்விகளுக்கு கலைஞர் அவர்கள் நமக்கு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளார்.

மனுஷ்ய புத்திரனது அனைத்து ஆதாரங்களும் பொய்கள்; புளுகு மூட்டைகள்; அவதூறுகள்; அநியாயங்கள் என்று அடுக்கடுக்கான சான்றுகளுடன் நாம் நிரூபித்துள்ளோம். அந்த சான்றுகளை கலைஞருக்கும் அனுப்பி வைத்துள்ளோம்.

ரிசானாவிற்கு அநியாயமாக மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது என்பதுதான் கலைஞரின் வாதம். அந்த வாதத்திற்கு தனிக்கட்டுரையில் விரிவாக பதில் அளிக்கப்பட்டுள்ளது.

மனுஷ்ய புத்திரன் சொன்ன பொய்களைத் தவிர்த்துவிட்டுப்பார்த்தால் கலைஞர் தனது அறிக்கையில் கூடுதலாக ஒரேயொரு வாதத்தைத்தான் முன் வைத்துள்ளார்.

வண்ணாரப்பேட்டை சம்பவம் :

சென்னை வண்ணாரப்பேட்டையில் 3மாத குழந்தைக்கு அதன் தாய் பாலூட்டிய போது, அந்தக் குழந்தைக்கு பால் புரையேறி மூச்சுத்திணறி அது இறந்து விட்டது. இந்த சம்பவம் கலைஞரின் அறிக்கை வெளியாவதற்கு முந்தைய நாள் செய்தித்தாள்களில் வந்திருந்தது. அதைச் சுட்டிக்காட்டி இதுபோல ரிசானா பால் கொடுக்கும் போதும் பால் புரையேறி மூச்சுத்திணறி 4மாத குழந்தை இறந்திருக்கலாம் அல்லவா என்பதுதான் கலைஞரின் வாதம்.

இது எவ்வளவு பெரிய அபத்தமான வாதம்?. ஒரு குற்றச் செயல் சம்பந்தமாக பேசும்போது மற்றொரு விபத்தை அத்துடன் ஒப்பிட்டு பேசினால் அறிவுடையோர் அதை ஏற்றுக் கொள்வார்களா?

அந்த குற்றத்தை சம்பந்தப்பட்டவர் செய்தாரா? இல்லையா?
அதற்குரிய ஆதாரங்கள் என்ன?
அந்த ஆதாரங்கள் உண்மையானவையா?
இதைத்தானே அறிவுடையோர் ஆராய்வார்கள்.
இந்த அடிப்படை விஷயம் கலைஞருக்கு தெரியாததா?

ஒருவரை மாடியில் இருந்து கீழே தள்ளி ஒருவன் கொடூரமான முறையில் கொலை செய்கின்றான் என்று வைத்துக் கொள்வோம். அந்த கொலைகாரன் மீது சுமத்தப்பட்ட கொலைக் குற்றத்திற்கு ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் தீர்ப்பளிப்பதுதான் அறிவுடையோர் செயல். அதைவிட்டுவிட்டு இந்த கொலைச் சம்பவம் உண்மையா இல்லையா என்பதை அன்றைய தினம் செய்தித்தாளில் வந்த செய்தியை வைத்து எந்த அறிவாளியும் முடிவு செய்யமாட்டார்.

இன்று நான் செய்தித்தாள் படித்தேன். அதில் இருவர் மொட்டை மாடியில் நின்று பேசிக்கொண்டிருந்த போது, ஒருவர் கால் தவறி கீழே விழுந்து செத்துவிட்டார் என்ற செய்தி அதில் இருந்தது. அதுபோல கொலை செய்யப்பட்டதாகச் சொல்லப்படுபவரும் கால் தவறி கீழே விழுந்து இறந்திருக்கலாம் அல்லவா? என்று யாராவது கேட்டால் அது எப்படி அறியாமையாக இருக்குமோ அதுபோலத்தான் கலைஞரின் வாதமும் அமைந்துள்ளது.

இது குறித்து கலைஞருக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் தலைவர் பீஜே அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். அதில், மரணதண்டனை கூடாது என்பது உங்களது கொள்கையாக இருக்குமானால், நீங்கள் கூறிய கருத்துக்கள் உண்மைதான் என்று சொல்வீர்களேயானால், மனுஷ்ய புத்திரன் கூறிய பொய்களில் உங்களுக்கு உடன்பாடு இருக்குமேயானால் அதை தக்க ஆதாரங்களுடன் மறுக்கும் எங்களிடத்தில் நீங்கள் விவாதிக்க முன்வரவேண்டும் என்று கலைஞருக்கு விவாத அழைப்பு விடப்பட்டுள்ளது. 

கடிதத்தை காண 
Click Here

source: onlinepj.com

Continue Reading...

பகிரங்க விவாதத்திற்கு அழைப்பு விடுத்து நக்கீரன், ஆனந்த விகடன் இதழுக்கு கடிதம்!

பகிரங்க விவாதத்திற்கு அழைப்பு விடுத்து நக்கீரன், ஆனந்த விகடன் இதழுக்கு கடிதம்!

இலங்கைப் பெண்மணி ரிசானாவுக்கு வழங்கப்பட்ட மரணதண்டனை சரியல்ல என்று கூறி இஸ்லாத்தை விமர்சனம் செய்து கட்டுரை வெளியிட்ட நக்கீரன், ஆனந்த விகடன் இதழ்கள் மற்றும் அந்த இதழ்களில் கட்டுரைகளை எழுதிய மனுஷ்ய புத்திரன், ஜே.பி.ஜோஸபின் பாபா, பாரதி தம்பி ஆகியோருக்கு பகிரங்க விவாத அறைகூவல் கடிதம்...

இந்தக் கடிதம் சம்பந்தப்பட்டவர்களுக்கு இன்று பதிவுத்தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். இன்ஷா அல்லாஹ்!

source: www.tntj.net

Continue Reading...

மாவட்ட நிர்வாகிகள்!

----------------------------------------------------
மாவட்டத்தலைவர்
அஷ்ரப் அலி - 9894819930
புதுஆத்தூர்
----------------------------------------------------
மாவட்டதுணை தலைவர்
ஜாஹிர் ஹுசைன் - 9677353392
லெப்பைக்குடிக்காடு
----------------------------------------------------
மாவட்ட செயலாளர்
சபீர் அலி - 9943509442
V களத்தூர்
----------------------------------------------------
மாவட்ட துணை செயலாளர்
ராஜ் முஹம்மது - 9994328213
பெரம்பலூர்
----------------------------------------------------
மாவட்ட பொருளாளர்
ஷேக் தாவூத் - 9655461134
லெப்பைக்குடிக்காடு
----------------------------------------------------

UAE நிர்வாகிகள்!

தலைவர்
A.முஹம்மதுயாகூப்
00971 50 7890713
--------------------------------------
செயலாளர்
A.சபியுல்லாஹ்
00971504758106
--------------------------------------
பொருளாளர்
M.ஜாஹிர்உசேன்
00971 50 5301352
--------------------------------------

VKRகிளைநிர்வாகிகள்

தலைவர்
K.G.அஹமதுபாஷா
9843044145
--------------------------------------
துணை தலைவர்
A.முஹம்மது அலி
--------------------------------------
செயலாளர்
A.முஹம்மது இப்ராஹீம்
--------------------------------------
துணை செயலாளர்
இனையத்துள்ள
--------------------------------------
பொருளாளர்
அப்துல் ஜப்பார்
--------------------------------------
தொன்டர் அனி
M.ஜியவுல் ஹக்
--------------------------------------
மானவர் அனி
K.ஜாசிம் ரசூல்
--------------------------------------

தொடர்பு கொள்ள

Powered by vkalathurtntj.tk

© Copyright 2014. TNTJ VKR. All Rights Reserved. -- Designed by: TNTJ VKR -- Powered by the TNTJ V.KALATHUR