திருச்சி கமிஷனரின் உத்தரவு. எதிர் கொண்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்!
திருச்சி கமிஷனரின் உத்தரவுவை எதிர் கொண்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.
திருச்சி மாவட்டத்தில் நேற்று மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி
பத்திரிக்கைகளில் செய்தி ஒன்றை வெளியிட்டார்.அதில் வரும்
17-01-2014(வெள்ளிகிழமை) வள்ளாலர் தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகரில் எந்த ஒரு இறைச்சி மற்றும் முட்டை கடையும் திறக்க கூடாதென்றும், எந்த ஒரு உணவகங்களிலும் அசைவம் விற்க கூடாதென்றும் மீறி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவிட்டார்.
இந்த உத்தரவில் முட்டை கடைகளையும் அசைவ உணவகங்களையும் மூட சொல்லி உத்தரவிட்டது திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த உத்தரவால் ஏழை மற்றும் நடுத்தர வணிகர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டத்தின் மாவட்ட நிர்வாகிகளை அணுகினர்.
உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலைமையின் கவனத்திற்க்கு கொண்டு சென்று தலைமையின் அறியுறுத்தலின்படி திருச்சி மாநகர்
முழுவதும் மாநகராட்சி கமிஷனரை கண்டித்து போஸ்டர் உடனடியாக
ஒட்டப்பட்டது.
இதையடுத்து மாவட்ட நிர்வாகம் காவல்துறை துணை ஆணையர்(DC) அவர்களை சந்தித்து,ஏழை இறைச்சி மற்றும் மீன் வியாபாரிகளுக்கு எதிராக இழைக்கும் அநியாயங்களையும் தமிழ்நாட்டில் எங்குமே இல்லாத போது திருச்சியில் மட்டும் தொடர்ந்து பதற்றத்தை விளைவிக்கும் மாநகராட்சி கமிஷனரின் உத்தரவை ரத்து செய்யும்படி கோரப்பட்டது.
உடனடியாக காவல்துறை துணை ஆணையர்(DC) அவர்கள் அதன் மேல் நடவடிக்கை எடுத்து நாளை வழக்கம் போல்(வெள்ளிகிழமை)
இறைச்சி,மீன் மற்றும் அசைவ உணவகங்கள் செயல்படும் என்று உறுதி அளித்தார்
அல்ஹம்துலில்லாஹ்...