My Blogger TricksAll Blogger TricksTechtunes
Preview
ஏகத்துவ வளர்ச்சிப் பணிக்கு உங்களுடைய சந்தாக்களையும் நன்கொடைகளையும் வாரி வழங்கிடுவீர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வங்கிக் கணக்கு: TAMILNADU THOWHEED JAMATH, INDIAN BANK, A/C NO: 788274827, MANNADY BRANCH: துபையில் : 055-4481405, 055-3873002 , 050-8486296

வெளிநாட்டு வேலைக்கு போறீங்களா? - இதப்படிங்க மொதல்ல

வெளிநாட்டு வேலைக்கு போறீங்களா? - இதப்படிங்க மொதல்ல



‘சிங்கப்பூரில் சித்தாள் வேலைக்கு ஆட்கள் தேவை.. 
சவுதியில் சமையல் வேலைக்கு ஆட்கள் தேவை..

கண்ணைப் பறிக்கும் கலரில் ஒட்டப்படும் இந்த போஸ்டர்களை நம்பி இன்னமும் பலபேர் போலி ஏஜென்ட்களிடம் ஏமாந்து கொண்டி ருக்கிறார்கள். இப்படி எல்லாம் இஷ்டத் துக்கு போஸ்டர் ஒட்டி, வெளிநாட்டுக்கு ஆள் பிடிப்பது சட்டப்படி குற்றம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

வெளிநாட்டு வேலைக்கு ஆட்கள் எடுப் பவர்கள் குடிபெயர்வோர் பாதுகாவலரிடம் (Protector Of Emigrants) லைசென்ஸ் பெறவேண்டும். தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா, கேரளா இந்த நான்கு மாநிலங்களுக்குமான குடிபெயர்வோர் பாதுகாவலர் (பி.ஓ.இ) அலுவலகம் சென்னையில் இருக்கிறது. வெளிநாடு வாழ் இந்தியர் நலனுக்கான அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த அலுவலகத்தில் ஐ.ஏ.ஏஸ். அதிகாரி பி.ஓ.இ-யாக இருக்கிறார்.

வெளிநாட்டு வேலைகளுக்கு ஆட்களை எடுக்கும் நிறுவனங்கள் 45 லட்ச ரூபாய்க்கு சொத்து மதிப்பும் 20 லட்ச ரூபாய்க்கு வங்கி உத்தரவாதமும் கொடுக்க வேண்டும். குறைந்தது 500 சதுர அடியில் சகல வசதிகளுடன் அலுவலகம் இருக்க வேண்டும். இதெல்லாம் இருந்தால் தான் லைசென்ஸ் கிடைக்கும். இந்த லைசென்ஸ் ஐந்தாண்டுகளுக்கு செல்லுபடியாகும். அதற்குள்ளாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பலாம்.

ஆள் பிடிப்பது குற்றம்
லைசென்ஸ் பெற்ற நிறுவனங்கள், பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்து ஆட்களை இன்டர்வியூவுக்கு அழைக்க லாம். துண்டுப்பிரசுரங்கள் கொடுத்தோ, லோக்கல் சேனல்களில் விளம்பரம் செய்தோ, சுவரொட்டிகளை ஒட்டியோ ஆள் பிடிப்பது சட்டப்படி குற்றம். லைசென்ஸ் பெற்ற நிறுவனங்கள் தவிர மற்றவர்கள் தனிநபர்களின் பாஸ்போர்ட் களை வாங்கி வைத்திருப்பதே கைதுக்குரிய குற்றம் என்கிறது சட்டம்.

வேலைக்கு ஆட்களை எடுக்கும் வெளிநாட்டுக் கம்பெனியானது பணியாளருக்க்கான குறைந்தபட்ச ஊதியம், விசா, தங்குமிடம், உணவு, மருத்துவம், போக்குவரத்து வசதி உள்ளிட்டவைகளை இலவசமாக அளிப்பதுடன், பணியாளர் இறக்க நேரிட்டால் பிரேதத்தை தங்கள் செலவிலேயே இந்தியாவுக்கு அனுப்பி வைப்பதாகவும் உத்தரவாதம் தரவேண்டும்.

வங்கி உத்தரவாதம்
எதிர்பாராத விதமாக வெளிநாட்டில் இந்திய பணியாளருக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அதற்கான இழப்பீட்டுத் தொகையை வெளிநாட்டுக் கம்பெனியிடமிருந்து வாங்கிக் கொடுக்கும் பொறுப்பு இங்கிருந்து ஆட்களை எடுத்து அனுப்பும் நிறுவனத்துடையது. இதில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால், அந்த நிறுவனத்தின் வங்கி உத்தரவாதத்தை வைத்து அரசே சம்பந்தப்பட்ட பணியாளருக்கு இழப்பீட்டை வழங்கிவிடும்.

போலிகளை தண்டிக்க முடியும்
“நிறுவனங்கள் மூலமாக இல்லாமல், சுயமுயற்சியில் வெளிநாட்டு வேலைகளுக்கு போகும் நபர்களுக்கு தினமும் நாங்களே இரண்டு மணி நேரம் வகுப்பு எடுக்கிறோம்’’ என்கிறார்கள் பி.ஓ.இ. அலுவலக அதிகாரிகள். “அதெல்லாம் சரி.. ஊர் ஊருக்கு பெட்டிக்கடை போட்டு வெளிநாட்டு வேலைக்கு ஆள் எடுப்பதாகச் சொல்லும் மோசடிக் கம்பெனிகளை தடுக்க முடியாதா?’’ என்று கேட்டால், “தமிழகத்தில் முறைப்படி லைசென்ஸ் பெற்ற நிறுவனங்கள் 104 மட்டுமே. மற்றவைகள் எல்லாமே போலிகள்தான். போலிகள் மீது நட வடிக்கை எடுக்க முடியும். ஆனால், எங்களிடம் அதற்கான மேன்பவர் இல்லை; போலீஸைத்தான் நம்ப வேண்டி இருக்கிறது. இதற்கு ஒரே வழி மக்கள் விழிப்புடன் இருப்பது தான்’’ என்கிறார்கள்.

Thanks
Tamilhindu

மாவட்ட நிர்வாகிகள்!


----------------------------------------------------
மாவட்டத்தலைவர்
அஷ்ரப் அலி - 9894819930
புதுஆத்தூர்
----------------------------------------------------
மாவட்டதுணை தலைவர்
ஜாஹிர் ஹுசைன் - 9677353392
லெப்பைக்குடிக்காடு
----------------------------------------------------
மாவட்ட செயலாளர்
சபீர் அலி - 9943509442
V களத்தூர்
----------------------------------------------------
மாவட்ட துணை செயலாளர்
ராஜ் முஹம்மது - 9994328213
பெரம்பலூர்
----------------------------------------------------
மாவட்ட பொருளாளர்
ஷேக் தாவூத் - 9655461134
லெப்பைக்குடிக்காடு
----------------------------------------------------

UAE நிர்வாகிகள்!

தலைவர்
A.முஹம்மதுயாகூப்
00971 50 7890713
--------------------------------------
செயலாளர்
A.சபியுல்லாஹ்
00971504758106
--------------------------------------
பொருளாளர்
M.ஜாஹிர்உசேன்
00971 50 5301352
--------------------------------------

VKRகிளைநிர்வாகிகள்

தலைவர்
K.G.அஹமதுபாஷா
9843044145
--------------------------------------
துணை தலைவர்
A.முஹம்மது அலி
--------------------------------------
செயலாளர்
A.முஹம்மது இப்ராஹீம்
--------------------------------------
துணை செயலாளர்
இனையத்துள்ள
--------------------------------------
பொருளாளர்
அப்துல் ஜப்பார்
--------------------------------------
தொன்டர் அனி
M.ஜியவுல் ஹக்
--------------------------------------
மானவர் அனி
K.ஜாசிம் ரசூல்
--------------------------------------

தொடர்பு கொள்ள








Powered by vkalathurtntj.tk



© Copyright 2014. TNTJ VKR. All Rights Reserved. -- Designed by: TNTJ VKR -- Powered by the TNTJ V.KALATHUR