My Blogger TricksAll Blogger TricksTechtunes
Preview
ஏகத்துவ வளர்ச்சிப் பணிக்கு உங்களுடைய சந்தாக்களையும் நன்கொடைகளையும் வாரி வழங்கிடுவீர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வங்கிக் கணக்கு: TAMILNADU THOWHEED JAMATH, INDIAN BANK, A/C NO: 788274827, MANNADY BRANCH: துபையில் : 055-4481405, 055-3873002 , 050-8486296

நபிகளாரின் இறுதி நாட்கள்...!



(முஹம்மதே) நீயும் மரணிப்பவரே! அவர்களும் மரணிப்பவர்களே! -  (39:30 அஸ்ஸூமர்)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தங்களுடைய மரணத் தருவாயில் எந்தளவுக்கு சிரமப்பட்டார்கள் என்றால் அவர்களால் எழுந்துகூட நடக்க இயலாதவர்களாக இருந்துள்ளார்கள்.அதனை பின்வரும் ஹதீஸ்கள் நமக்கு அழகாக படம் பிடித்துக் காட்டுகின்றன. 

நோயின் தொடக்கம்: மையவாடியில் ஜனாஸாவை அடக்கம் செய்தபின் நபி(ஸல்)அவர்கள் என்னிடத்தில் வந்தார்கள். அப்போது என் தலைவலியின் காரணமாக, அந்தோ! என் தலையே! என்றேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் எனக்கும் தலை வலிக்கிறது என்றார்கள். பின்பு என்னிடம் நீ எனக்கு முன்பு மரணித்து விட்டால், உன்னை நானே குளிப்பாட்டி, கஃபன் செய்து உனக்காக தொழுவித்து அடக்கம் செய்வேன். எனவே, உனக்கு எந்தக் கவலையும் இல்லை என்றார்கள். பின்பு அவர்கள் இறப்பதற்குரிய வலி ஆரம்பிக்கத்  தொடங்கியது...

(ஆயிஷா(ரலி)அஹ்மது 24720,தாரமி 80, இப்னுமாஜா 1454)

நபி(ஸல்)அவர்கள், மைமூனா(ரலி) வீட்டில் இருக்கும் போதுதான் முதன்முதலாக நோய்வாய்ப்பட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா(ரலி) அவர்கள் வீட்டில் தங்கி சிகிச்சை பெறுவதற்காகத் தம்முடைய ஏனைய மனைவியிடத்தில் அனுமதி கேட்டார்கள். அவர்களும் அனுமதி வழங்கினார்கள். நபி(ஸல்) அவர்கள், தம்முடைய நோயின் காரணமாக ஒரு கையை ஃபழ்ல் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் மீதும் மற்றொரு கையை இன்னொரு மனிதர் (அலீ(ரலி)) மீதும் வைத்தவர்களாக தம்முடைய இரு கால்களும் பூமியில் இழுபடுமாறு புறப்பட்டு வந்தார்கள். (ஆயிஷா(ரலி) புகாரி 198)

நோயின் கடுமை: அவர்கள், எனது இல்லத்திற்கு வந்தபோது, அவர்களின் நோய் கடுமையாகி விட்டது. அப்போது, வாய்ப்பகுதி அவிழ்க்கப்படாத தோல் பையிலிருந்து (நீரை) என் மீது ஊற்றுங்கள். மக்களுக்கு நான் உபதேசம் செய்யக்கூடும் என்றார்கள். எனவே நாங்கள் ஹப்ஸா(ரலி) அவர்களின் துணி அலசும் பாத்திரத்தின் மீது அமர வைத்தோம்.பிறகு அவர்கள் மீது தோல் பையிலிருந்து ஊற்றத் தொடங்கினோம். பிறகு அவர்கள் போதும் என்று கையால் சைகை செய்தார்கள். பிறகு மக்களை நோக்கி புறப்பட்டு சென்று அவர்களுக்கு தொழுவித்தார்கள். பிறகு உபதேசம் செய்தார்கள். (ஆயிஷா(ரலி) புகாரி 198,665, 2588, 4442)

நான், ஆயிஷா(ரலி) அவர்களிடம், சென்று நபி(ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்ததுப் பற்றி எனக்கு நீங்கள் கூறக்கூடாதா? என்று கேட்டேன். அதற்கவர்கள், நபி(ஸல்) அவர்களுக்கு நோய் கடுமையானபோது, மக்கள் தொழுது விட்டனரா? என்று கேட்டார்கள். நாங்கள் இல்லை! அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறினோம். அப்போது தண்ணீர் தொட்டியில் எனக்காக தண்ணீர் வையுங்கள் என்று கூறினார்கள். அவ்வாறே நாங்கள் செய்தோம். அவர்கள் குளித்து விட்டு எழ முயன்றார்கள். ஆனால் மயக்கமுற்று விட்டார்கள். பின்னர் அவர்களின் மயக்கம் தெளிந்தபோது, மக்கள் தொழுது விட்டனரா? எனக் கேட்டார்கள். இல்லை. உங்களுக்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பின்னர் குளித்தார்கள்.இவ்வாறே நான்கு முறை கேட்டார்கள். (உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் புகாரி 687)

தன்னால் எழ இயலவில்லை, அப்படியே எழ முயற்சித்தால் கூட மயக்கமுற்று விடக்கூடிய நிலையிலும், அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், தொழுகையைப் பற்றி தான் விசாரித்துள்ளார்கள். ஆனால், இன்று நம் சகோதரர்களோ சாதாரண தலைவலி என்றால் கூட தொழுகையை விட்டு விடுகின்றனர். அதேபோல் ரமளானில் பள்ளிக்கு வந்தவர்கள், ரமளானிற்குப் பிறகு பள்ளியின் பக்கம் தலைவைத்துப் படுப்பதில்லை என்பது வருந்தத்தக்க செய்தி. 

பல்துலக்கும் குச்சியை மென்று அதனைக் கொண்டு நான் நபி (ஸல்) அவர்களுக்கு பல் துலக்கி விட்டேன் (ஆயிஷா(ரலி) புகாரி 890,4438)

நபி(ஸல்) அவர்களை விடக் கடுமையாக வேதனைப்படக்கூடிய வேறு எவரையும் நான் பார்த்ததில்லை (ஆயிஷா(ரலி) புகாரி 5646)

இருவரின் வேதனை: நபி(ஸல்) அவர்கள் கடுமையாக வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும்போது நான் அவர்களிடம் சென்றேன். அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் கடும் நோயினால் சிரமப்படுகின்றீர்களே! இதனால் தங்களுக்கு இரு நன்மைகள் கிடைக்கும் என்பதாலா? என்றேன். அதற்கவர்கள், ஆம்! இருவர் படக்கூடிய வேதனை! எந்தவொரு முஸ்லீமுக்குத் துன்பம் நேர்ந்தாலும் அதற்கு பகரமாக மரத்தின் இலைகள் உதிர்வதைப் போன்று அவருடைய பாவத்தை அல்லாஹ் உதிரச் செய்யாமல் இல்லை. (அப்துல்லாஹ் இப்னு மஸ்வுது(ரலி) புகாரி 5647,5648,5660,5661,5667)

நோய்க்கான காரணம்: நபி(ஸல்) அவர்கள் அன்பளிப்பாகக் கிடைத்த பொருட்களைச் சாப்பிடுவார்கள். தான தர்மங்களை எடுத்துக்கொள்ள மாட்டார்கள். கைபர் பகுதியைச் சேர்ந்த ஒரு யூதப்பெண்மனி, பொறித்த ஆட்டிறைச்சியை நபி(ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கினாள். நபி(ஸல்) அவர்களும், பிஷ்ர்இப்னுபரா(ரலி) அவர்களும் சாப்பிடலானார்கள். பின்னர் நபி(ஸல்) அவர்களுக்கு விஷம் தோய்க்கப்பட்ட உணவு என்பது அறிவிக்கப்பட்டது. ஆனால் பிஷர்இப்னுபரா(ரலி) அவர்கள் மரணித்து விட்டார்கள். 

அப்பெண்ணை அழைத்து வந்து, நீ ஏன் இவ்வாறு செய்தாய்? என நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கவள், நீர் நபியாக இருந்தால் உமக்கு எந்த தீங்கும் நேராது. நீர் மன்னராக இருந்தால் மக்களை உம்மைவிட்டும் நிம்மதியடையச் செய்யலாம் என்று கூறினாள். நோயின் வேதனையின்போது, கைபரில் சாப்பிட்டதின் விளைவை உணர்கின்றேன். என் இதயத்தின் இரத்தக்குழாய் துண்டிக்கப்படுவதை நான் உணரும் நேரமிது என்றார்கள்.(அபூஸலமா(ரலி) அபூதாவூத் 2912)

நோயிலும் நபி(ஸல்) அவர்கள்: நபி(ஸல்) அவர்களுக்கு விஷம் வைத்த இறைச்சியை விருந்தாகக் கொடுத்த அந்த யூதப்பெண்ணை கொன்று விடலாமா? என்று கேட்கப்பட்டபோது, நபி(ஸல்) அவர்கள், வேண்டாம்! என்றார்கள். அவர்களின் தொண்டைச் சதையில் அந்த விஷத்தின் பாதிப்பை தொடர்ந்து பார்த்து வந்தேன். (அனஸ்(ரலி) புகாரி 2617)

தன்னை கொலை செய்யும் நோக்கில் விஷம் வைத்த இறைச்சியை சாப்பிட சொன்ன அந்த யூதப்பெண்மணியை கொலை செய்து விடலாமா? என சஹாபாக்கள் கேட்க, வேண்டாம் என்று கூறி அந்த பெண்ணை மன்னித்த மாண்பு முத்திரைப் பதிக்கிறது.இன்று எத்தனைப் பேர் தனக்கு தீங்கிழைத்தவர்களை மன்னிக்கும் பண்பை பெற்றுள்ளனர்.

”தங்களுக்கு வேண்டியப்பட்டவர்கள், தங்களின் இனத்தை சேர்ந்தவர்கள், மொழி பேசக்கூடியவர்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டாலும்,நாட்டின்  பிரதமரையே கொலை செய்திருந்தாலும், தண்டிக்கக் கூடாது என்று போராட்டம் நடத்துவார்கள். ஆனால் அதே செயலை முஸ்லிம்கள் செய்ததாக பொய் குற்றச்சாட்டு புனையப்பட்டிருந்தாலும்,தண்டிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்துவார்கள். இத்தகைய முரண்பாடுகள் கொண்டவர்களுக்கு இந்த மாமனிதரின் வாழ்க்கையில் ஏராளமான படிப்பினைகள் உள்ளன.” 

நபி(ஸல்) அவர்கள், தலையில் கட்டுப்போடப்பட்ட நிலையில் என்னிடத்தில் வந்தார்கள். அவர்கள் ஃபழ்லே! என் கையைப்பிடி என்றார்கள். நான் அவர்களின் கையைப் பிடித்து மிம்பரின் பக்கம் அழைத்துச் சென்றேன். நபி(ஸல்) அவர்கள் அதன் மீது அமர்ந்தார்கள். பின்னர் மக்களை அழைத்து, மக்களே! எவனைத் தவிர வேறு நாயன் இல்லையோ அந்த அல்லாஹ்வைப் புகழ்கின்றேன். உங்களுக்குரிய உரிமைகளை என்னிடத்தில் நீங்கள் கேட்டுப் பெறக்கூடிய காலம் நெருங்கி விட்டது. எனவே நான் யாருடைய முதுகிலாவது அடித்திருந்தால் இதோ என்னுடைய முதுகு! அவர் பழிதிPர்த்துக் கொள்ளட்டும். நான் யாரையாவது திட்டியிருந்தால், இதோ நான் இருக்கிறேன். அவர் பழிதிர்த்துக் கொள்ளட்டும். அறிந்து கொள்ளுங்கள்!பகைமைக் கொள்வது என்பது என்னுடைய இயல்பிலும் குணத்திலும் இல்லை.அறிந்து கொள்ளுங்கள்! உங்களில் எனக்கு விருப்பமானவர் என்னிடத்தில் அவருக்குரிய உரிமை இருந்து, அந்த உரிமைகளை எடுத்துக் கொள்பவரே ஆவார். அல்லது அதை எனக்கு ஆகுமானதாக்கட்டும். நான் மிகுந்த பரிசுத்த ஆன்மாவோடு அல்லாஹ்வை சந்திக்க விரும்புகின்றேன் என்று சொன்னார்கள். பிறகு லுஹர் தொழுதார்கள். பின்பு மீண்டும் முன்பு சொன்னதையே சொன்னார்கள். அப்போது ஒருவர் எழுந்து அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் எனக்கு மூன்று திர்ஹம்கள் தர வேண்டியள்ளது என்றார். உடனே நபி(ஸல்) அவர்கள், ஃபழ்லே! அவருக்குக் கொடுத்து விடுவீராக! என்றார்கள். நான் கொடுத்தேன். அவர் அமர்ந்து விட்டார்.

பின்பு மக்களே! ஏதாவது பொருள் உங்களில் யாரிடமாவது இருந்தால் அவர் அதை இப்போதே ஒப்படைத்து விடட்டும். உலகத்தில் உள்ள தவறை எப்படி வெளிப்படுத்துவது என்று கூற வேண்டாம். ஏனெனில் தவறுகள் மறுமையில் வெளிப்படுவதை விட இம்மையில் வெளிப்படுவதே சிறந்ததாகும் என்று கூறினார்கள். பின்பு இன்னொரு மனிதர் எழுந்து, அல்லாஹ்வின் பாதையில் மோசடி செய்த மூன்று திர்ஹம்கள் உள்ளன என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், எதற்காக மோசடி செய்தீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கவர்(வறுமையில்) அவை எனக்கு தேவைப்பட்டன என்றார். ஃபழ்லே! அவற்றை வாங்கிக் கொள்வீராக! என்றார்கள். 

 பின்பு மக்களே! உங்களில் யாராவது தன் விஷயத்தில் எதையாவது பயந்தால் எழுந்து நிற்கட்டும். அவருக்காக நான் பிரார்த்தனைச் செய்கிறேன் என்றார்கள். அப்போது ஒருவர், அல்லாஹ்வின் தூதரே! நான் ஒரு பாவி. பெரும் பொய்யன். நான் (தொழாமல்) அதிகம் உறங்குபவன் என்றார். இறைவா! இவருக்கு உண்மையையும், ஈமானையும் வழங்குவாயாக! அவர் நாடும்போது தூக்கத்தைப் போக்கி விடுவாயாக! என்று பிரார்த்தித்தார்கள். 

பின்பு இன்னொரு மனிதர், அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக!நான் பெரும் பொய்யன், முனாஃபிக். நான் செய்யாத பாவங்கள் இல்லை.  இதைக்கேட்ட உமர்(ரலி) அவர்கள், ஏன் உம்மையே நீர் கேவலப்படுத்திக் கொள்கிறீர்? என்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், கத்தாபின் மகனே! மறுமையின் கேவலத்தை விட இம்மையின் கேவலம் இலேசானதுதான் என்று சொல்லி விட்டு, இறைவா! இவருக்கு உண்மையையும், ஈமானையும் வழங்குவாயாக! இவருடைய காரியத்தை நன்மையின் பக்கம் திருப்புவாயாக! (ஃபழ்ல் இப்னு அப்பாஸ் (ரலி) முஸ்னத் அபீயஃலா 6824)

நம்மில் எத்தனைபேர் மரணத் தருவாயில் செய்தத் தவறுகளுக்கும்,பாவங்களுக்கும்மன்னிப்புத் தேடுகின்றோம். 

மரண வேளையில்: நபி(ஸல்) அவர்கள், மரணிப்பதற்கு முன் ஆயிஷா(ரலி) அவர்களின் நெஞ்சின் மீது சாய்ந்தவர்களாக, இறைவா! என்னை நீ மன்னிப்பாயாக! எனக்கு அருள் புரிவாயாக! உயர்ந்த தோழர்களுடன் என்னைச் சேர்ப்பாயாக! என்று பிரார்த்தனை செய்தார்கள். (ஆயிஷா(ரலி) புகாரி 3670, 4436, 4437)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என் வீட்டில், எனது நெஞ்சுக்கும் நுரையீரலுக்குமிடையே இறப்பெய்தினார்கள். அவர்களது இறப்பின் போது எனது எச்சிலையும் அவர்களின் எச்சிலையும் இறைவன் ஒன்று சேர்த்தான். இவை அல்லாஹ் என் மீது பொழிந்த அருட்கொடையாகும். என் சகோதரர் அப்துர்ரஹ்மான் பல்துலக்கும் குச்சியுடன் வந்தார். நபி(ஸல்) அவர்கள், அப்துர்ரஹ்மானைப் பார்த்தார்கள். நபி(ஸல்) அவர்கள் பல்துலக்க விரும்புகிறார்கள் என்பதை நான் உணர்ந்துக் கொண்டேன் உங்களுக்கு பல்துலக்கி விடவா என்றேன். அவர்கள் ஆம்! என்றார்கள். அதை நான் மென்று அவர்களிடம் கொடுத்தேன். அவர்களிடம் தண்ணீர் நிரம்பிய தோல் பாத்திரம் இருந்தது. 

நபி(ஸல்) அவர்கள் தம், இரு கைகளாலும் தண்ணீருக்குள் நுழைத்து, அவ்விரண்டாலும் தம் முகத்தைத் தடவிக் கொண்டு வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. மரணத்திற்கு துன்பங்கள் உண்டு. பிறகு தமது கரத்தை உயர்த்தி இறைவா! சொர்க்கத்தில் உயர்ந்த தோழர்களுடன் என்னைச் சேர்த்தருள் என்று பிரார்த்தனை புரிந்தார்கள். இறுதியில் அவர்களின் உயிர் கைப்பற்றப்பட அவர்களின் கரம் சரிந்தது. (ஆயிஷா(ரலி) புகாரி 4449)

 மரணத்தருவாயில் அல்லாஹ்வுடைய தூதர்(ஸல்) அவர்கள் எல்லாம் வல்ல அல்லாஹ் பல சிறப்புக்களை தருவதாக வாக்களித்திருந்தாலும், நபி(ஸல்) அவர்கள், இறைவனிடம் பிரார்த்தனைப் புரிந்துள்ளார்கள் என்றால் நமக்கு அழகான படிப்பினை உள்ளது. 

 நபி(ஸல்) அவர்கள், மக்ரிப் தொழுகையில், வல்முர்ஸலாத்தி உர்ஃபன், என்ற அத்தியாயத்தை ஓதுவதை நான் செவியுற்றேன். அதன் பிறகு அவர்களின் உயிரை அல்லாஹ் கைப்பற்றும் வரை அவர்கள் எங்களுக்கு தொழ வைக்கவே இல்லை. (உம்மு ஃபழ்ல்(ரலி) புகாரி 763, முஸ்லீம் 704)

நபி(ஸல்) அவர்கள், தமது 63 வயதுடையவர்களாக இருந்தபோது, மரணித்தார்கள். (ஆயிஷா(ரலி) புகாரி 4466, 3536, 3851, 3902)

நபி(ஸல்) அவர்கள் இறுதியில், அதிகமாக தொழுகை மற்றும் மனித உரிமைகளைப் பற்றி தான் உபதேசம் செய்தார்கள். ஆகவே, நபி(ஸல்) அவர்களுடைய இறுதி நாட்கள் தரும் படிப்பினையைச் சிந்தித்து, அதனை நமது வாழ்வில் நடைமுறைப்படுத்தி நற்பேறு அடைய அல்லாஹ் அருள் புரிவானாக!   







மாவட்ட நிர்வாகிகள்!


----------------------------------------------------
மாவட்டத்தலைவர்
அஷ்ரப் அலி - 9894819930
புதுஆத்தூர்
----------------------------------------------------
மாவட்டதுணை தலைவர்
ஜாஹிர் ஹுசைன் - 9677353392
லெப்பைக்குடிக்காடு
----------------------------------------------------
மாவட்ட செயலாளர்
சபீர் அலி - 9943509442
V களத்தூர்
----------------------------------------------------
மாவட்ட துணை செயலாளர்
ராஜ் முஹம்மது - 9994328213
பெரம்பலூர்
----------------------------------------------------
மாவட்ட பொருளாளர்
ஷேக் தாவூத் - 9655461134
லெப்பைக்குடிக்காடு
----------------------------------------------------

UAE நிர்வாகிகள்!

தலைவர்
A.முஹம்மதுயாகூப்
00971 50 7890713
--------------------------------------
செயலாளர்
A.சபியுல்லாஹ்
00971504758106
--------------------------------------
பொருளாளர்
M.ஜாஹிர்உசேன்
00971 50 5301352
--------------------------------------

VKRகிளைநிர்வாகிகள்

தலைவர்
K.G.அஹமதுபாஷா
9843044145
--------------------------------------
துணை தலைவர்
A.முஹம்மது அலி
--------------------------------------
செயலாளர்
A.முஹம்மது இப்ராஹீம்
--------------------------------------
துணை செயலாளர்
இனையத்துள்ள
--------------------------------------
பொருளாளர்
அப்துல் ஜப்பார்
--------------------------------------
தொன்டர் அனி
M.ஜியவுல் ஹக்
--------------------------------------
மானவர் அனி
K.ஜாசிம் ரசூல்
--------------------------------------

தொடர்பு கொள்ள








Powered by vkalathurtntj.tk



© Copyright 2014. TNTJ VKR. All Rights Reserved. -- Designed by: TNTJ VKR -- Powered by the TNTJ V.KALATHUR